Volunteer Voice
ப.நீலாவதி B .sc LLB
நண்பனே ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டு இருக்கின்ற உன் குரல் எனக்கு கேட்கிறது.... உன்னுடைய கனத்த இதயம் இனியும் வாழ வேண்டுமா என்ற வாசகத்தை நினைவு கூறிக்கொண்டே இருப்பதும் எனக்கு புரிகிறது.... ஏதோ ஒரு கஷ்டம் அதில் எப்படி தான் மீண்டு வருவது யாரிடம் சொல்லி தீர்ப்பது என்றெல்லாம் உன் மனம் புலம்பி கொண்டிருப்பதை என் மனமும் இங்கு உணர்ந்து கொண்டிருக்கிறது... வா நண்பா என்னிடம் பேசு... தற்கொலை எண்ணம் தவறு என்று சட்டம் கூட ஐ பி சி பிரிவு 309 கூறியுள்ளது. அப்படிப்பட்ட குற்றத்தை நீ செய்து உன் மரணத்தையே ஒரு குற்றமாக்கா வேண்டுமா ???
சு. இரகுபதி. சி.எஸ் நகர். ஈரோடு
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக மாறும் போதும், வாழ்வில் ஏற்படும் சாவால்களையும, சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம், ஞானம் மற்றும் அனுபவம் இல்லாத காரணத்தாலும், சில நேரங்களில்நம்மை தேற்றி ஆறுதல் கூறும் தோழமை/ துணை/ வழிகாட்டி இல்லா காரணங்களால் யாரும் ஒரு சில ம ணி துளிகளில் தவறான முடிவு எடுத்து தற்கொலை செய்யும் முடிவெடுக்கிறார்கள். இது போன்ற நிலை யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இது கோழைத் தனமோ, சாபமோ, விதியோ அல்ல.
தேசத்தின் குறிக்கோள் ஏதாவது ஒரு வகையில் மேற்கூறிய சூழ்நிலையில் தோள் கொடுத்து உயிர் காப்பது என்ற உயர்ந்த குறிக்கோள். இதில் இணைந்து சிரிய பங்களிப்பு செய்வது மிகவும் மன நிறைவாக உள்ளது.
Professor. N. SRINIVASAN, Kongu Engineering College
Take off is not in your control and landing is not in your control. But choice is in your control. Choose Happiness.
Er. Ayyasamy, Gobi
ஒரு மனிதன் பிறப்பு எண்பது அவன் சந்தோசமாக வாழ்வதற்காக மட்டுமே. ஆனால் அவனுடைய வாழ்வியல் பிரச்சனையில் அதை சமாளிக்க முடியாமல் தற்கொலை முடிவிற்கு வருவது என்பது கோழைத்தனம். அதை தடுக்க வேண்டும் என்பதை" நேசம்" முன் எடுத்தால் இதில் நான் பங்கெடுத்தேன்.
Senthilkumar
சமூகப் பிரச்சினைகளைப் பற்றி ஊடகங்களில் பார்க்கும்போதும் ,மற்றவர்கள் மூலம் கேள்விப்படும் போதும், என்னால் அணைத்தையும் மாற்ற முடியாது என்று என்னை நான் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். நேசம் பற்றி தெரிய வந்ததும் , நான் அணைத்தையும் மாற்ற முடியாது ஆனால் என்னால் முடிகிற சில செயல்களும் உண்டு அதைச் செய்தால் போதும் என நேசத்தில் இணைத்திருக்கிறேன்.
Venkatesh
`கடன் தொல்லையால் கணவன்-மனைவி விஷம் குடித்தனர்;
பிள்ளைகள் கைவிட்டதால் விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட பெற்றோர்;
பணிச்சுமை காரணமாக மருத்துவ மேற்படிப்பு மாணவர் தற்கொலை;
ஒருதலைக்காதல் விவகாரத்தில் ரயில் முன் பாய்ந்த இளைஞன்;
Thiruvaimani, Surampatti Naal Road, Erode
ஒரு நபர் தம் வாழ்க்கையை நலமாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் எதார்த்தமாக ஒரு காரியத்தில் ஈடு படும் பொது அது எதிர் மறையாக மாறும் போது அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகும் போது சில நேரங்களில் அவரது உறவினரோ அல்லது அவருடன் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள் ஏதாவது ஒரு வழியில் அவருக்கு மன ரீதியாக தொந்தரவு கொடுக்கும் போது எந்த ஒரு மனிதனுக்கும் தான் வாழ்க்கையில் நிம்மதி இழந்து கோழை தன்மாக வாழ மனமின்றி தற்கொலை முயற்சி வருகிறது, இந்த சமயத்தில் அவருக்கு ஆறுதல்,(பல வழிகள் )கொடுத்தால் நிச்சயம் ஒரு உயிரை காப்பாற்ற முடியும். இதை ஒரு அமைப்பின்m மூலம் செய்தால் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நோக்கில் உருவாக்கிய 'நேசம் 'என்ற அமைப்பின் மூலம் ஒரு உயிரை காப்பாற்ற முடியும். எனவே தான் நான் இதில் என்னை இணைத்து கொண்டேன். 👏